Sunday, January 11, 2009

சோமாலியா என்னதான் நடக்கிறது?

சோமாலியா என்னதான் நடக்கிறது?

வறுமை , பட்டினி ,சாவு எனபதற்க்கு என்றைக்கும் உதாரணமாய் திகழும் அம்மனிதர்கள் செய்யத பாவம் தான் என்ன?

உப்பிபெருத்த வயிறு , ஈர்க்கு குச்சிகள் போன்ற கை கால் இவைதான் அம் மண்ணின் மைந்தரின் அடையாளம்.




ஆபிரிக்க கண்டத்தின் கொம்பு என வர்ணிக்கப்படும் இத்தேசம் கென்யா , எதியொப்பியா ,டிஜிபோரி ஆகிய நாடுகளை அயல் நாடுகளாகவும் இந்து சமுத்திரம் , ஏடன் வளைகுடா ஆகிய வற்றை மறு எல்லைகளாகவும் கொண்டு விளங்குகின்றது.




1960 இல் இதன் ஒருபகுதி இத்தாலி தேசத்திடம் இருந்து பிரிந்து ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்த மறு பகுதி தேசத்துடன் சேர்ந்து கொண்டது. அதன் பின் 26 ஜூன் 1960 இல் முழுமையான் சுதந்திரம் அடைந்து சோமாலிய சோசலிச குடியரசானது.

எனினும் 1969 இல் நடந்த இராணுவ புரட்சி மூலம் மக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜெனரல் ஷெர்மார்க் அதிபரானார். இதன் மூலம் சோமாலியா புரட்சிகர இராணுவம் உருவாக்ககம் பெற்று அவர்களின் சிறந்த திட்டங்கள் மூலம் மக்களின் அடிப்படை பொருளாதார வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்தக்களவு வெற்றியும் கண்டனர்.

இவ்வேளையில் தான் சோமாலியாவின் தலைவிதி மாறத்தொடங்கியது தனக்கு தானே மண் அள்ளிபோட்டது போல் வல்லரசு போட்டிக்கு தன்னை பலிக்கடா ஆகியது சோமாலியா.

குடியேற்ற காலத்தின் போது சோமாலியாவில் இருந்து பிரிக்கப்பட்டு எதியோப்பாவுடன் இணைக்கப்பட்ட தனது பிரதேசமான ஓக்டெனை மீண்டும் சோமாலியாவோடு இணைக்க வேண்டும் எனும் வேண்டுகோள் சோமாலியாவினால் எதியோபியாவுக்கு விடுக்கப்பட்டது. எதியோப்பா , கென்யா ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிய எதியோப்பியா மீது போர் தொடுத்தது சோமாலியா.

1977 இல் ஆரம்பமான இப்போரை பயன்படுத்தி அன்றைய வல்லரசுகள் (அமெரிக்கா ,சோவியத் யூனியன் -ரஷ்யா ) குளிர்காய சோமாலியாவை தளமாக பயன்படுத்ததொடங்கினர். உலக நாடுகளின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக போரில் குதித்ததாக சோமலியாவை உலக நாடுகள பலவும் பகைத்துக்கொள்ள எதியோப்பியாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியனும் , சோமாலியாவிற்க்கு ஆதரவாக அமெரிக்காவும் செயற்ப்பட இரு வல்லரசுகளின் பனிப்போர் போட்டிக்கு இரையானது எதியோப்பியாவும் சோமாலியாவும்.



தொடர்ச்சியான போர் நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்க, இராணுவ ஆயுதங்கள் மிக எளிதாக கிடைக்க ஆயுதக்குழுக்கள் பலவும் வகை தொகையின்றி உருவாகின. பனிப்போரின் (அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையான போட்டி ) முடிவு வரை சோமாலியாவில் அரசியல் நிர்வாகம் இயங்காமலே கிடந்தது அல்லது அமெரிக்கா அதனை இயங்காமல் செய்தது என்பதே உண்மை. அமெரிக்கவால் ஒரு பொம்மை அரசு உருவாகினாலும் அதனால் ஆயுதகுழுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை . ஆயுதகுழுக்கள் உணவுக்காக , நீருக்காக என அடிப்படை தேவைகளுக்குக்காக தம்மிடையே சண்டை போடவேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களும் , ஒவ்வோரு குறிச்சிகளும் என இந்த ஆயுத குழுக்கள் தம் வசப்படுத்திக் கொண்டு சிற்றரசர்கள் ஆகினர் ஆயுத குழு தலைவர்கள்.




பசி , பட்டினி என இலட்சகணக்கானவர் மாண்டுபோயினர்.

அனாலும் சோமாலிலாந்து எனும் ஒரு மாகாணம் மட்டும் தன்னை சோமாலியாவில் இருந்து விடுவித்து கொண்டு தன்னை ஒரு சுதந்திர தேசமாக அறிவித்தது. சோமலியா அதனை ஏற்றுக்கொள்ளாத போதும் சோமாலிலாந்து அதிகார பூர்வமன ஒரு அரசகவே உலக நாடுகள் சில நோக்குகின்றன. சில நாடுகள் சோமாலிலாந்தில் தனது அதிகாரபூர்வ தூதுவராலயங்களையும் கொண்டும் உள்ளன. அனாலும் ஐக்கிய நாடுகள் சபையினால் தனி நாட்டிற்கான அங்கீகாரம் இன்றுவரை கிடைக்கவில்லை.

உலகின் கண்களுக்கு இடியப்ப சிக்கலான பிரச்சனைகளை கொண்ட நாடாக மாற்றிய உலக நாடுகள் ஏன் இன்றுவரை சோமாலியாமீது கரிசனை காட்டாது உள்ளன ?

இதன் பின்ண்ணியில் உலக நாடுகளின் நயவஞ்சகம் எப்படி உள்ளது.

இவற்றிக்கு இப்பொழுது நாம் விடை தேடுவோம் ........

ஆம் இதன் அமைவிடத்தை நன்றாகவே பயன்படுத்திய உலக வல்லரசுகள் தமது இரசாயன (யுரேனிய )கழிவுகளை கொட்டும் இடமாக சோமாலியாவை பயன்படுத்தி கொண்டன என்பதே உறைக்கும் உண்மை.

பெரிய கடல் வளத்தை கொண்டிருந்த போதும் அவர்கள் அதன் பலாபலன்களை பெறமுடியாது போய்விட்டனர் சோமாலியர்.






கடற்கரைகளில் தினமும் ஒதுங்கும் இரசாயன கழிவுகளால் கடல் வாழ் உயிரிணங்கள் மட்டுமல்ல சோமாலியா மக்களே வகை தொகையின்றி செத்துக்கொண்டு இருக்கிறனர். உலக நாடுகளுக்கு சோமாலியாவின் கடலில் தமது கழிவுப்பொருட்டகளை கொட்டுவது மிகவும் இலாபகரமாக இருப்பதோடு சோமாலியாவில் ஒரு உறுதியான அரசு இல்லாமை இவர்களுக்கு இன்னும் வாய்ப்பாகிப்போனது.

ஒருபக்கத்தில் ஆயுத கலாச்சாரத்தை ஊக்கிவித்தபடி மறுபக்கத்தில் தமது சுய தேவகளை குறுக்குவழியில் அடையும் இன்நாடுகள் சோமாலியர்களை ஒரு மனித இனமாக மதிப்பதாகவே தெரியவில்லை.



ஐக்கிய நாடுகள் சபை வாய்மூடி இருக்க அந்த இனம் வேரோடு சத்தமில்லாமல் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இன் நிலையில் தான் தங்கள் கடல் எல்லையில் வரும் கப்பல்களை தாக்கத்தொடங்கினர் சோமாலியர்கள் , வழக்கம் போலவே உலகம் அவர்களை கடல் கொள்ளையர் என்கின்ற பட்டத்துடன் அதனை வெறு ஒருதிசையில் அவர்களது பிரச்சனைகளை திசை திருப்பி அவர்களை கொள்ளையாரக்கி , பயங்கரவாதிகள் ஆக்கி அழகு பார்த்தது உலகம்.

போராடித்தான் அனைத்தையும் பெற வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்ட அம்மக்கள் , நாகரிக உலகத்தின் சுயநலத்திற்க்கு பலியாகிபோன ஒரு மக்கள் கூட்டம்.



அந்த மெல்லிய கறுத்த உருவங்கள் தம் மண்ணிலேயே பசியாலும் நோயாலும் இறந்து கொண்டிருக்க உலகம் இவர்கள் மீது அரசில் நடாத்திக்கொண்டு இருப்பது இன்றைய நவ நாகரிக உலகத்தின் வெட்ககேடான ஒரு செய்தியே...