யாழ்.இந்து கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இடை யிலான "இந்துக்களின் துடுப்பாட்டம்' (Battle of The HIndus) இன்று சனிக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமாகின்றது.
நேரடி இணை ஒளிபரப்பில் (Live Scorecard) www.kokuvilhindu.net
இன்று காலை 8 மணிக்குக் கொக்குவில் இந்துக் கல் லூரி மைதானத்தில் போட்டி ஆரம்பமாகின்றது. போட்டிக்கு பிரதம விருந்தினராக "செலிங்கோ இன்சூரன்ஸ் நிறு வனத்தின் யாழ்.பிராந்திய விற்பனை முகாமையாளர் பி.நந்திக்குமரனும் கௌரவ விருந்தினராக ஈ.எஸ்.பி.நிறுவனத் தின் உரிமையாளர் எஸ்.பி.நாகரட்ணமும் கலந்துகொள் கின்றனர்.
காலை 8.15 மணிக்கு விருந்தினர்களின் மங்கள விளக் கேற்றலைத் தொடர்ந்து இரு கல்லூரிகளின் அதிபர்களும் பாடசாலைக் கொடிகளை ஏற்றிவைப்பார்கள். அதனைத் தொடர்ந்து பாடசாலைக் கீதங்கள் இசைக்கப்படும். அதன் பின் காலை 10 மணிக்குப் போட்டிகள் ஆரம்பமாகும்.
இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான முதலாவது மிகப்பெரும் துடுப்பாட்டப் போட்டி இது என்பதால் மிக வும் விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாண்டு இடம்பெற்ற பருவகாலப் போட்டிகளில் துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகியவற்றில் இரு அணிகளும் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தவுள்ளன. அத் துடன் அனுபமிக்க வீரர்கள் இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ளார்கள்.
போட்டி நடைபெறும் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்குச் சாதகமாக இருக் கும் என்று கருதப்படுவதால் துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
எமது கல்லூரியின் நீண்டநாள் ஆசை இவ்வாண்டு நிறைவேறுகின்றது
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக்கல்லூரிக்கும் இடையிலான இந்துக்களின் துடுப்பாட்டம் இவ்வாண்டு முதன் முறையாக ஆரம்பிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். எமது கல்லூரியின் நீண்டநாள் ஆசை இவ்வாண்டு நிறைவேற்றப்படு வது இந்துக் கல்லூரியின் மைந்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
2007ஆம் ஆண்டில் எமது கல்லூரி அணி யாழ். மாவட்ட சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வலுவான நிலையில் உள்ள எமது அணி தனது முழுமையான திறனை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
இதேபோன்று கொக்குவில் இந்துக் கல்லூரியின் அணியும் பலமான நிலையில் உள்ளது. இரண்டு பல மான அணிகளும் மோதுகின்றபோது இத்துடுப்பாட்டம் நிகழ்வு எல்லோருக்கும் சிறப்பான மகிழ்ச்சியான விறுவிறுப்பான போட்டியாக அமையும் என எதிர் பார்க்கலாம்.
இவ்விரு அணிகளும் எதிர்காலத்தில் தேசிய மட்டப் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களை அனுப்புவதற்கு இந்த இந்துக்களின் துடுப்பாட்டம் ஒரு களமாக அமைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
யாழ்.இந்து அதிபர்
வீ.கணேசராஜா
பலம் வாய்ந்த பல பந்துவீச்சாளர்கள்
எமது கல்லூரி அணி வசம் உள்ளனர்
யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த இந் துக் கல்லூரிகள் இரண் டுக்குமிடையே நடைபெறும் இத்துடுப்பாட்டப் போட்டி இரு கல்லூரிச் சமூகத்தின தும் நீண்ட நாள் கனவாகி இன்று நன வாகின்றது. எமது கல்லூரி அணியின் பந்து வீச்சாளர்கள் பலம் வாய்ந்த நிலையிலுள்ள அதேவேளை, துடுப் பாட்ட வீரர்களும் சிறந்து விளங்குகின்றார்கள். இவ்வணி கடந்த ஆண்டு மாவட்டச் சம்பியனாக 17 வயதுப் பிரிவில் தெரிவாகியது. 19 வயதுப் பிரிவும் சாதனை படைக்கும் என நம்புகின்றேன். எனது காலத்தில் இப்போட்டி நடை பெறுகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது.
எமது கல்லூரி அணி நிச்சயம் இப்போட்டியில் சாத னையை நிலைநாட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
ந.நிமலன்
விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்
யாழ்.இந்துக் கல்லூரி.
முழுத் திறமையையும் வெளிப்படுத்தி
இந்து அன்னைக்குப் பெருமை சேர்ப்போம்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யுடன் எனக்குள்ள தொடர்பு நெருக்க மானது, நீண்டகாலமானது. நான் இந்துக் கல்லூரியில் மாணவன். கிரிக் கெட் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீர ராகவும் ஆசிரியராகவும் இருந்துள் ளேன். அணியில் விளையாடிய கால கட்டத்தில் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுப்பதில் முக்கிய பங் காற்றியுள்ளேன். அதைத் தொடர்ந்து பயிற்றுநராய் இந்த அணிக்கு பயிற்சியளிப்பது மனதிற்கு இன்பத்தைத் தரு கின்றது. அந்த வகையில் தற்போதைய யாழ். இந்து அணி பல திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது. ஆனால் அவர்களின் திறமையை வெளிகாட்ட அதிகளவான போட்டிகளில் பங்குபற்ற முடியாதது துரதிர்ஷ்டம். ஆனா லும் இன்று ஆரம்பமாகும் போட்டியில் தமது முழுத் திற மையும் வெளிப்படுத்தி இந்து அன்னைக்குப் பெரு மையை உண்டாக்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அத்துடன் இவ்வாறான போட்டிகளினால் எதிர் காலத்தில் திறமையான வீரர்களை யாழ்.மாவட்டம் பெற் றுக்கொள்ளும் என்பதில் ஐயம் எதுவுமில்லை.
என்.சிவராஜ்
யாழ்.இந்து பயிற்றுநர்.
இந்தத் துடுப்பாட்டப் போட்டி எமது நீண்டகால எதிர்பார்ப்பு யாழ்ப்பாணத்தில் உயர்வீச்சுக் கொண்ட இரு கல்லூரிகளுக்கும் இடை யில் நடைபெறும் துடுப்பாட்டப் போட்டி நீண்டகால எதிர்பார்ப்பாகும். எமது கல்லூரிக்கும் யாழ்.இந்துக் கல்லூ ரிக்கும் இடையிலான உறவு இறுக் கமானது. இரு கல்லூரிகளும் ஆரம் பிக்கப்பட்ட நோக்கமும் ஒன்றா கும். அன்று முதல் இன்று வரை அதிபர், ஆசிரியர் உறவு, சமூக உறவு என்பன பலமட் டங்களில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. கொக்குவில் இந்துவின் பல அதிபர்கள், ஆசிரியர்கள் இந்துக் கல்லூரி யின் வளர்ச்சியில் பக்கபலமாக இருந்துள்ளனர். இரு கல் லூரிகளுக்குமான சமூகமும் ஒன்றாகவே உள்ளது.
இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் நடைபெறும் துடுப்பாட்டப்போட்டி வரலாற்றின் முதற்படியாகும். இப் போட்டியுடன் இணைந்த வகையில் வருங்காலத்தில் பலபோட்டிகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதன் மூலம் மாணவர்களிடையே ஆளுமை வளர்ச்சி, நல்லு றவு, சமூகப்பற்று, புரிந்துணர்வு என்பனவற்றை உரு வாக்கமுடியும் எனத் திடமாக நம்புகின்றேன். இப்போட்டி முதற்தடவையாக பெரிய அளவில் நடைபெறுவதால் மாண வர்கள் இயல்பாகவே வீறுகொண்டு எழுந்துள்ளனர். இவ் வெழுச்சி இரு கல்லூரிகளுக்கும் இடையில் உறவை மேம் படுத்தவேண்டுமே தவிர எதிர்விளைவை ஏற்படுத்தக் கூடாது.
இப்போட்டி சிறப்பாக நடைபெறுவதற்கு இரு கல்லூரி களின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பி கள் காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கின்றேன். புத்தாயிரம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட் டுள்ள இப்போட்டி சிறப்புற நடைபெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கொக்குவில் இந்து அதிபர்
ஏ.அகிலதாஸ்
யாழ்.மண்ணில் திறமையான வீரர்களை உருவாக்க இது புதிய அத்தியாயம்
19வயதுப் பிரிவினருக்கான சினேக பூர்வ துடுப்பாட்ட போட்டியானது தொடர்ச்சியாக பல வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இவ்வருடம் இப்போட்டியானது இரு இந்துக் கல் லூரிகளின் சமூகத்தின் முயற்சியினால் மாபெரும் துடுப்பாட்ட போட்டியாக (ஆச்ttடூஞு ணிஞூ tடஞு ஏடிணஞீதண்) என்ற பெயரில் விளையாட உள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப் பாக அமையும்.
இன்று தொடங்கும் இப்புதிய அத்தியாயம் யாழ்.மண் ணில் திறமை மிக்க துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கி எமது பிரதேசத்தில் விளையாட்டுத்துறையில் மகுடம் சூடவைக் கும் என நம்புகின்றேன். யாழ்.மண்ணில் முதன்முறையாக எமது கல்லூரியில் இப்போட்டி நடைபெறுவது பெருமை மிக்க வரலாற்றுப் பதிவாக அமையும்.
இப்போட்டியில் மோத உள்ள இரு அணியைச் சேர்ந்த வீரர்களும் தமது திறமைகளை வெளிக்காட்டி சாதனைகளை நிலைநாட்ட கொக்குவில் இந்துக் கல்லூரியின் சார்பில் வாழ்த் துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
இ.ச.உமாசுதன்
விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்
கொக்குவில் இந்துக் கல்லூரி.
சவால் மிக்க போட்டியாக "இந்துக்களின் துடுப்பாட்டம்' அமையும் "இந்துக்களின் துடுப்பாட்டம்' இவ் வருடம் முதல்முறையாக ஆரம்பமாவ தில் இரு பாடசாலைச் சமூகங்களும் பெருமிதம் கொள்கின்றன. எமது பாட சாலை வீரர்கள் இப்போட்டியில் வெற்றி யீட்ட வேண்டும் என்பதில் ஆர்வத்து டனும் உற்சாகத்துடனும் இருக்கின்றார் கள். அணி 4 வேகப்பந்து வீச்சாளர் களையும் 2 சுழல் பந்துவீச்சாளர்களை யும் கொண்டுள்ளது. அத்துடன் துடுப்பாட்டத்தில் இவ் வாண்டு 3 வீரர்கள் சதம் அடித்து சாதனை படைத்திருக்கின் றார்கள். இப்போட்டி எமது அணிக்குப் பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கின்றேன். இப்போட்டி இரு பாட சாலை அதிபர்களின் முன்முயற்சியில் சிறப்பாக அமைந்து இரு அணிவீரர்களும் சிறப்பாக விளையாடி சாதனை புரிய வேண்டும் என்பதே எனது விருப்பம்.
எஸ்.கோகுலன்
கொக்குவில் இந்து பயிற்றுநர்.
பழைய மாணவர் உள்ளத்திலிருந்து...
யாழ்.மண்ணில் பிரபல்யம் மிக்க இரண்டு கல்லூரி கள் மோதும் ஆட்டமாக இந்த "இந்துக்களின் துடுப்பாட்டம்' அமையப்போகின்றது. யாழ். இந்துக் கல்லூரியைப் பொறுத்த மட்டில் அது பல ஆண்டு காலமாக விளையாட்டுத்துறையில் முன்னணியில் திகழ்கின்றது. குறிப்பாக கிரிக்கெட்டுக்கு யாழ். இந்து மிகவும் பெயர் போனது. பல முதற்தரப் போட்டி களில் யாழ். இந்துவின் கிரிக்கெட் அணி தனது பெயரைப் பதிவு செய்திருக்கின்றது.
அந்த வகையில் இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இரு கல்லூரிகளும் இந்தப் பருவகாலப் போட்டிகளில் தமது முழுத்திறமையை யும் ஆட்டங்களில் வெளிப்படுத்தியிருந்தன. இதனால் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக அமை யும்.
யாழ். இந்து அணி பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சிறந்ததாக உள்ளது. அதேவேளை, கொக்குவில் இந்து அணி யிலும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். சவால் மிக்க இந்தப் போட்டியில் வெல்வது யார் என்பதைப் பொறுத்தி ருந்து பார்ப்போம்.
கே.நகுலேந்திரன்
யாழ். இந்து பழைய மாணவன்
நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் முக்கிய இரு பாடசாலை அணிகள் இன்று மோதுகின்றன.
முன்னாள் அதிபர்களான அ.பஞ்சலிங்கம், எஸ்.மகேந்தி ரன் போன்றவர்கள் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. இன்று முயற்சிகள் வெற்றிபெற்றுள்ளன.
இரு கல்லூரிகளின் ஆதரவாளர்களும் மோதி விபரீதங் களில் ஈடுபடுவார்களோ என்ற அச்ச நிலை காணப்படு கின்றது. நேசபூர்வமாக நட்பு ரீதியாக அணுகி அமைதி யான ஆட்டமாக இன்றைய ஆட்டம் அமைய சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.
மாணவர்கள் தமது வேகத்தைக் கட்டுப்படுத்தி அமைதி யான ஆட்டத்துக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என வேண்டி நிற்கின்றேன்.
எஸ்.நகுலன்
கொக்குவில் இந்து பழைய மாணவன்
சனிக்கிழமை காலை
எங்கட பள்ளிக்கூடம் கொக்குவில் இந்து வெல்க ;-)
ReplyDelete