Sunday, June 8, 2008

சாப்ட்வேர் வாழ்க்கையில் ஒரு நாள்...

இமெயிலில் நண்பன் ஒருவரிடம் இருந்து வந்த இப்பகுதியை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். இந்த கறுமத்தை தான் 10 வருசமா நானும் பண்னுவதால் எதோ அன்னிய நாடொன்றில் நம்ம ஆளைக்கண்ட சந்தோசம்.....

இன்னைக்கு காலையில் எழுந்தப்பவே மணி எட்டு. 8:30மணிக்கு ஆபிசுல ஒரு மீட்டிங். எவன் தான்இப்படி 8:30மணிக்கு மீட்டிங் வைக்கிறாங்கன்னு தெரியலை. எனக்கு ஒரு மேனேஜர் இருக்கார். அவர்ஒரு சேவல் மாதிரி. 5 மணிக்கு மனுஷன் எழுந்திடுவாரு. ஒரே மெயிலா அடிச்சி தள்ளுவாரு.7:30மணிக்கு ஆபிசுக்கு வந்திடுவாரு. அதனால் அவர் எப்பவுமே மீட்டிங் செட் பண்ற நேரம் காலைஒன்பது மணி, 8:30 மணி இப்படி தான் இருக்கும். மேனேஜர்னா என்னா கொம்பா அப்படின்னு எனக்குதோணும். இருந்தாலும் என்ன பண்றது குப்பை கொட்டியாகனுமேன்னு மல்லு கட்ட வேண்டி இருக்கு.இன்னைக்கு 8:30மணி மீட்டிங் மட்டம் தான் அப்படின்னு நினைச்சுக்கிட்டு காக்கா குளியல் போட்டு8:30 பஸ் புடிச்சு, அப்புறம் ஒரு டிரெயின் புடிச்சி ஆபிஸ் நுழையறப்ப மணி 9:30, மீட்டிங்அவ்வளவு தான்னு நமக்கு தெரியும். மேனேஜருக்கு முகத்தை காட்டமா அப்படியே நழுவி சீட்டுக்குவந்துட்டேன். சீட்டுக்கு வந்ததும் முதல் வேலை இ-மெயில் செக் பண்றது. காலையில இது ஒரு இம்சை. ஒரு 100மெயில் இருக்கும். அதுல எனக்கு தேவையான மெயில் ஒரு 5 மெயில் தான் இருக்கும். அந்த 5மெயிலை கண்டுபிடிக்க 100 மெயிலையும் மேய்ந்து ஆகணும். வேகமா ஒவ்வொரு மெயிலா பார்த்துமுடிச்சப்ப மணி 10:30 ஆயிடுச்சி. ரொம்ப களைப்பா இருந்துச்சா ஒரு காபி குடிக்கலாம்னுஆபிஸ் cafeteria வந்தேன். இந்த காபி ஒரு இம்சை. சென்னையில நாயர் கடை காபி, டீ சாப்பிட்டுபழக்கப்பட்டு போன நமக்கு இது ஒரு கசாயம் மாதிரி. ஒரு 6 பாக்கெட் சக்கரை எடுத்தேன். 6பாக்கெட் சக்கரை கொட்டினா, அது ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு வரும். அதை போட்டு கப் நிறைய காபிஊத்தி, சும்மா கொஞ்சம் பால் ஊத்தினா கசாயம் தயார் ஆயிடும். அதுக்கு விலை 1.25டாலர். 50ரூபாய் அப்படின்னு ஆரம்ப காலத்துல மனசு கணக்கு போடும். இப்பவல்லாம் அப்படி இல்லை. நம்ம ஊருவிலை நிலவரம் இப்ப மோசமாமே… காபி குடிச்சு முடிக்கறப்ப மணி 11மணி ஆயிடுச்சி. மேனேஜர் எங்க நம்பள தேடுவாரோஅப்படின்னு பயம் எல்லாம் இல்ல. அதான் "I am looking into this" அப்படின்னு ஒரு நாலுஇ-மெயில மேனேஜருக்கு "CC" போட்டு தட்டிட்டு வந்திருக்கோம்ல. பையன் ஆபிசுல தான் இருக்கான்அப்படின்னு மேனேஜருக்கு தெரியும். வேலை களைப்புல தம் போட போயிருப்பான் அப்படின்னுநினைச்சுருப்பாரு. 11மணிக்கு சீட்டுக்கு வந்து "Looking into this" அப்படின்னு அரை மணிநேரத்துக்கு முன்னாடி சொன்ன பிரச்சனையை பார்க்க ஆரம்பிச்சேன். அதுக்குள்ளாற ஒரு இம்சை "Anyupdate on this" அப்படின்னு கேட்டு தொலைச்சிருக்கான். அவன் பெயரைப் பார்த்தேன். நம்மவூர்ஆளு தான். நம்மள மாதிரியே இப்படி மெயில் அடிச்சிட்டு "தம்" போட போயிருப்பான் அப்படின்னுநினைக்கிறேன். பார்த்து தொலைக்கிறேண்டா அப்படின்னு திட்டிக்கிட்டே அந்த மெயிலை முதல்லகவனிச்சு அவனுக்கு ஒரு பதில் போட்டேன். அது போல அந்த நாலு மெயிலையும் கவனிச்சு முடிச்சாமணி 12:30 ஆயிடுச்சி. சாப்பாடு நேரம் வந்திடுச்சிடோய் அப்படின்னு நம்ம நட்பு ஒருத்தன் வந்துதோலைத் தட்டினான். சரிடா அப்படின்னு கம்யூட்டரை லாக் பண்ணிட்டு கிளம்பினோம். எங்க சாப்பிடறதுன்னு முடிவு பண்றது அடுத்த பிரச்சனை. சரி, நேரா subway போலாம்டாஅப்படின்னு முடிவு பண்ணி Mc D போனோம். இது ஒரு கொடுமையான விஷயம். ஆனாலும் cheapand best. ஒரு பிரட்டை வைச்சி நாளு இலை, தழைகளை வச்சி கொடுப்பானுங்க. அதுக்கு 4டாலர். இங்கயாவது பரவாயில்லை. இதையே நம்ம சென்னை ஸ்பென்சர் ப்ளாசாவுல வச்சி அதுக்கு200ரூபான்னு சொல்றானுங்க. அங்கன நம்ம அமுல் பேபி பசங்க, பொண்ணுங்க வாங்கற கொடுமைக்கு பெயர்- அமெரிக்க கலாச்சாரமாம். லஞ்ச் சாப்பிட்டு முடிக்கறப்ப மணி 1:30. நேரா சீட்டுக்கு வந்தா, 2மணிக்கு ஒரு மீட்டிங்காம்.எப்படி இன்னும் சிறந்ததா மென்பொருள் தயாரிக்கலாம் அப்படின்னு அனலிசிஸ் பண்ண போறாங்களாம்.அதுக்கு பேர் - Brain Storming. இப்படி பேசி பேசியே மண்டையில முடி இல்லாமாபோச்சிடுடா அப்படின்னு நொந்து நூடுல்சானேன். ஏற்கனவே அனுப்பின மெயிலுக்கு விளக்கம் கேட்டுசில மெயில்கள். அதுக்கு விளக்கம் சொல்லி முடிச்சி, நேற்று பாதியில விட்டுட்டு போன codingஆரம்பிக்க போனா, மனசுல நம்மவூர் ஞாபகம் வந்திடுச்சி. நம்ம Rediff, தினமலர் எல்லாம் ஒருபார்வை போட்டுட்டு பார்த்தா மணி 2 ஆயிடுச்சி. "Coming.." அப்படின்னு மேனேஜர் கேட்க, வர்றேண்டா அப்படின்னு கிளம்பினேன். நடந்து போனா நம்மபக்கத்து ப்ராஜக்ட் பொண்ணு க்ராஸ் ஆச்சு. ஒரு ஸ்மைல் போட்டு "ஹாய்" சொல்லிட்டு "கொஞ்சம் குண்டாஆயிட்டா" அப்படின்னு நினைச்சுக்கிட்டே கான்பிரன்ஸ் ரூம் போனேன். கொஞ்ச நேரம் சொந்த கதை சோககதை எல்லாம் பேசிட்டு நல்லா Brain Storming பண்ணா, தூக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு.கெட்டியா முழிச்சிக்கிட்டு ஐடியாவா போட்டு தள்ளினோம். இப்ப ஓடற இந்த Process, முப்பதுநிமிடம் ஆகுது. 5-10 நிமிடத்துல இது ஓடியாகனும் அப்படின்னு நம்ம மேனேஜர் சொன்னாரு.1மணி நேரம் ஓடிக்கிட்டு இருந்ததை 30நிமிடம் ஆக்கனும்னு சொன்னே. இப்ப 30நிமிடம் ஓடறது5-10 நிமிடமாம். இப்படியே வேலையை கொடுத்துக்கிட்டே இருங்க, அப்ப தான் எல்லோருக்கும், எல்லாகாலத்திலேயும் வேலை இருக்கும் அப்படின்னு நினைச்சுக்க்கிட்டேன். அடுத்த ப்ராஜக்ட்டா இப்பஇருக்கிற Database மாற்றி வேற Database போகலாம்னு சொன்னாரு. போன வருஷம் தான் வேறஒண்ணுல இருந்து மாறினோம். இப்படியே பண்ணிக்கிட்டு இருங்க. இங்கேயே நான் ரிடயர் ஆயிடறேன்அப்படின்னு நினைச்சுக்கிட்டேன். மீட்டிங் முடிஞ்சப்ப மணி 3 ஆயிடுச்சி. "let's go for coffee" அப்படின்னு மேனேஜர்சொன்னாரா, அப்படியே cafeteria வந்தோம். காபி வாங்கி ஒரு தம் போட்டு முடிக்கறப்ப மணி3:30 ஆயிடுச்சி. நேரா சீட்டுக்கு வந்து பாதியில இருந்த Codingஐ ஆரம்பிச்சேன். அத்தமுடிச்சு, டெஸ்ட் பண்ண ஆரம்பிச்சா மணி 4:30 ஆயிடுச்சி. மறுபடியும் ஹிந்து, எக்னாமிஸ்டைம்ஸ், blooomberg, சி.என்.என் அப்படின்னு மேய்ந்து விட்டு மணி பார்த்தா 5:30ஆயிடுச்சி.மேனேஜர் வீட்டுக்கு போயிட்டாரா அப்படின்னு நைசா எட்டி பார்த்தேன். மனுஷன் அசையற மாதிரிதெரியலை. அவருக்கு தெரியும். அவரு அங்க இருந்து கிளம்பினா அடுத்த நொடி எல்லா பசங்களும்எஸ்கேப் ஆயிடுவானுங்க அப்படின்னு. அதான் மனுஷன் 7:30 மணியில இருந்து அசையாம சீட்டுலஉட்கார்ந்துக்கிட்டு இருக்காரு. சரி என்ன பண்ணலாம் அப்படின்னு தோன்றப்ப, லைட்டா வாக்கிங்போகலாம்னு நேரா தண்ணி குடிக்க வந்தேன். பச்சை தண்ணி தான் - மினரல் வாட்டர். குடிச்சிட்டுபக்கத்து ப்ராஜக்ட் பக்கமா அப்படியே போனேன். ஒரு கூட்டம் தெரிஞ்சுது. கொஞ்சம் நேரம் அரட்டைபோட்டு விட்டு வந்தா மேனேஜர் வீட்டுக்கு போயிக்கிட்டு இருக்காரு. இதை தானே எதிர்பார்த்தோம்அப்படின்னு ஒரு ஸ்மெல் போட்டோம். "Not leaving" அப்படின்னு கேட்டாரு. "Some work to complete" அப்படின்னு சொன்னேன்."Don't work hard" அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு. சொல்லுவடா சொல்லுவ, வேலையைவரிசையா குடு அப்புறம் Don't work hard அப்படின்னு சொல்லு அப்படின்னு நினைச்சுக்கிட்டேசீட்டுக்கு வந்து logoff பண்ணிக்கிட்டு வீட்டுக்கு கிளம்பிய பொழுது மணி 6.

4 comments:

 1. மிகவும் சரளமாக சற்றே நகைச்சுவை கலந்து கலக்கியிருக்கிறீர்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!

  ReplyDelete
 2. உங்கள் வருகைக்கு நன்றி செல்லா

  ReplyDelete
 3. நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கீங்க.தொடர்ந்து எழுதுங்க.
  முடிஞ்சா வார்த்தை சரிபார்த்தலை நீக்கிவிடுங்கள்.

  ReplyDelete
 4. உங்கள் வருகைக்கு நன்றி பிரேம்ஜி

  ReplyDelete